இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன் இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்துக் கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின் கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக் களித்தெனைஅங் கழைத்து மயங்காதே இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில் மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய் புயங்காநின் அருளருமை அறியாது திரிந்தேன் பொய்யடியேன் அறிந்தின்று பூரித்தேன் உளமே