இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர் எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர் இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர் எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர் இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர் இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர் இயற்கைநிறை வானவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்