இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம் இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார் மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார் மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே