இரக்கம் என்பதென் னிடத்திலை எனநீ இகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன் பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன் பார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய் காள கண்டனே கங்கைநா யகனே திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத் திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே