இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால் இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ கரக்கின் றோர்களைக் கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் புரக்கின் றோர்மலர்ப் புரிசடை உடையார் பூத நாயகர் பொன்மலைச் சிலையார் உரக்குன் றோர்திரு வொற்றியூர்க் கேகி உன்னி ஏற்குதும் உறுதிஎன் நெஞ்சே