இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார் கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம் கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில் சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார் உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி