இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர் இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம் பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம் பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும் விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய் உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்