இருக்க வாவுற உலகெலாம் உய்ய எடுத்த சேவடிக் கெள்ளள வேனும் உருக்கம் ஒன்றிலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மைமற் றன்றே தருக்க நின்றஎன் தன்மையை நினைக்கில் தமிய னேனுக்கே தலைநடுக் குறுங்காண் திருக்கண் மூன்றுடை ஒற்றிஎம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே