இருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம் எடுப்பதொன்றாம் இன்பநிலை கொடுப்பதொன்றாம் எனவே பொருட்டாயர் போற்றுகின்ற பொன்னடிகள் வருந்தப் பொறையிரவில் யானிருக்கும் இடந்தேடிப் புகுந்து மருட்டாயத் திருந்தேனைக் கூவிவர வழைத்து வண்ணம்ஒன்றென் கைதனிலே மகிழ்ந்தளித்தாய் நின்றன் அருட்டாயப் பெருமைதனை என்னுரைப்பேன் பொதுவில் ஆனந்தத் திருநடஞ்செய் தருளுகின்ற அரசே