இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்கத் திருஅமுதும் அளித்தபெரும் பதியே திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர் திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும் பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே