இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை எண்ணுறேல் இனிவஞ்சக் கருப்பு காவணம் காத்தருள் ஐயனே கருணைஅம் கடலேஎன் விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே வேல்உடை எம்மானே தருப்பு காஇனன் விலகுறும் தணிகைவாழ் சாந்தசற் குணக்குன்றே