இருமை யளவும் பொழிலொற்றி யிடத்தீர் முனிவ ரிடரறநீர் பெருமை நடத்தீ ரென்றேனென் பிள்ளை நடத்தி னானென்றார் தரும மலவிவ் விடையென்றேன் றரும விடையு முண்டென்றார் கரும மெவன்யான் செயவென்றேன் கருதாண் பாலன் றென்றாரே