இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் என்பிழை அன்றெனப் பலகால் விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் வேறுநான் செய்ததிங் கென்னே அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே அப்பனே என்றிருக் கின்றேன் துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது தூயதாம் திருவுளம் அறியும்