இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கியுட் கலந்தே கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில் அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே