இருளான மலம்அறுத் திகபரங் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத் தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும் அருளான வீதியில் ஆடச்செய் தீரே அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே