இருளை யேஒளி எனமதித் திருந்தேன் இச்சை யேபெரு விச்சைஎன் றலந்தேன் மருளை யேதரு மனக்குரங் கோடும் வனமெ லாஞ்சுழன் றினம்எனத் திரிந்தேன் பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன் பொதுவி லேநடம் புரிகின்றோய் உன்றன் அருளை மேவுதற் கென்செயக் கடவேன் அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- முறையீடு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்