இருள்ஆர் மனத்தேன் இழுக்குடையேன் எளியேன் நின்னை ஏத்தாத மருள்ஆர் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் அருள்ஆர் அமுதப் பெருக்கேஎன் அரசே அதுநீ அறிந்தன்றோ தெருள்ஆர் அன்பர் திருச்சபையில் சேர்க்கா தலைக்கும் திறம்அந்தோ