இருள்நிறைந்த இரவில்அடி வருந்தநடந் தடியேன் இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று தெருள்நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத் திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பேன் அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே