இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர் கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங் கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே