இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல் எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம் உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும் திருவடிகள் மிகவருந்த நடந்தெளியேன் பொருட்டாத் தெருக்கவந் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக் குருவடிவங் காட்டிஒன்று கொடுத்தாய் என்கரத்தே குணக்குன்றே நின்னருட்கென் குற்றமெலாங் குணமே