இறந்தவர்கள் பலரும்இங்கே எழுகின்ற தருணம்இதே என்று வாய்மை அறந்தழைய உரைக்கின்ற வார்த்தைகள்என் வார்த்தைகள்என் றறைகின் றாரால் மறந்தசிறி யேன்உரைக்க வல்லேனோ எல்லாஞ்செய் வல்லோய் உன்றன் சிறந்ததிரு வார்த்தைஎனத் தெரிந்திலர்இம் மனிதர்மதித் திறமை என்னே