இறப்பி லார்தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத் தானும் மறப்பி லாதுளம் நினைத்திடில் காமம் வழிம றித்ததை மயக்குகின் றதுகாண் குறிப்பி லாதென்னால் கூடிய மட்டும் குறைத்தும் அங்கது குறைகில தந்தோ வறிப்பி லாவயல் ஒற்றியூர் உடையீர் வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே