இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில் இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன் பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன் நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன் கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே