இறைக்குளே உலகம் அடங்கலும் மருட்டும் இலைநெடு வேற்கணார் அளகச் சிறைக்குளே வருந்தும் மனத்தினை மீட்டுன் திருவடிக் காக்குநாள் உளதோ மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய வள்ளலே உள்ளகப் பொருளே மறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும் அணிதிருத் தணிகைவாழ் அரைசே