இறையார் ஒற்றி யூரினிடை இருந்தார் இனியார் என்கணவர் மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ பொறையார் இரக்கம் மிகவுடையார் பொய்ஒன் றுரையார் பொய்யலடி குறையா மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே