இறையேனும் உன்றன் அடிஎண்ணி அங்கிஇழுதென்ன நெஞ்சம் இளகேன் மறைஓதும் உன்றன் அருள்பெற்ற தொண்டர் வழிபட்டலங்கல் அணியேன் குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ நிறையோர் வணங்கு தணிகா சலத்தில் நிலைபெற் றிருக்கும் அவனே