இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன் எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும் மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக் கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே