இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும் நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர் மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே பொறையுறக்கொண் டருட்ஸோதி தன்வடிவும் உயிரும் பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே