இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன் மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர் கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே