இலவு காக்கின்ற கிள்ளைபோல் உழன்றாய் என்னை நின்மதி ஏழைநீ நெஞ்சே பலவு வாழைமாக் கனிகனிந் திழியும் பணைகொள் ஒற்றியூர்க் கென்னுடன் வருதி நிலவு வெண்மதிச் சடையுடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்தநீற் றழகர் குலவு கின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கிநான் கொடுப்பன்உன் தனக்கே