இலைஎ னாதணு வளவும்ஒன் றீய எண்ணு கின்றிலை என்பெறு வாயோ கொலைஇ னாதென அறிந்திலை நெஞ்சே கொல்லு கின்றஅக் கூற்றினும் கொடியாய் தலையின் மாலைதாழ் சடையுடைப் பெருமான் தாள்நி னைந்திலை ஊண்நினைந் துலகில் புலையி னார்கள்பால் போதியோ வீணில் போகப் போகஇப் போக்கினில் அழிந்தே