இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம் தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத்தள்ளாய் நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான் மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே