இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர் இயற்கையின் நிறைந்தபே ரின்பே அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே அம்பலத் தாடல்செய் அமுதே வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து வழங்குக நின்அருள் வழங்கல் நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ நான்உயிர் தரிக்கலன் அரசே