இல்லைஎன் பதனுக் கஞ்சிடேன் நாய்க்கும் இணையிலேன் இழிவினேன் துயர்க்கோர் எல்லைமற் றறியேன் ஒதியனேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் கல்லைவில் ஆக்கும் கருணைவா ரிதியே கண்ணுதல் உடையசெங் கனியே தில்லைவாழ் அரசே தெய்வமா மணியே திருவொற்றி யூர்வரும் தேவே