இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி