இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை வளைத்த மதின்மூன் றெரித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத் திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழுந் துரியா தீதமட்டுங் கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே