இழுதை நெஞ்சினேன் என்செய்வான் பிறந்தேன் ஏழை மார்முலைக் கேவிழைந் துழன்றேன் பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன் பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன் அழுது கண்கள்நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே தொழுது மால்புகழ் தணிகைஎன் அரசே தோன்ற லேபரஞ் சுடர்தரும் ஒளியே