இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர் அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில் சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங் கென்னால் உறவே தினி