இவ்வுல கதிலே இறைஅர சாட்சி இன்பத்தும் மற்றைஇன் பத்தும் எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் எண்ணுதோ றருவருக் கின்றேன் அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் அரிமுத லோர்அடை கின்ற கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் எந்தைஎன் கருத்தறிந் ததுவே