இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள் எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக் கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய் செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான் சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே