ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார் என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே உவட்டாத தெள்ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன் தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே