ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத் தேசனைத் தலைமை தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்துநின் றேத்தா நீசரை நாண்இல் நெட்டரை நாரக நேயரைத் தீயரைத் தரும நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே