ஈசன்அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம் ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம் தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம் தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்