ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான் ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய் என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார் கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால் கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ