ஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந் நாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி மேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த ஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே
ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை இன்புறச் செய்கின்றீர் வாரீர் வன்பர்க் கரியீரே வாரீர் வாரீர்