ஈதல் ஒழியா வண்கையினார் எல்லாம் வல்ல சித்தர்அவர் ஓதல் ஒழியா ஒற்றியில்என் உள்ளம் உவக்க உலகம்எலாம் ஆதல் ஒழியா எழில்உருக்கொண் டடைந்தார் கண்டேன் உடன்காணேன் காதல் ஒழியா தென்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே