ஈனத் திவறும் மனக்கொடியோர் இடம்போய் மெலிந்து நாள்தோறும் ஞானத் திருத்தாள் துணைசிறிதும் நாடேன் இனிஓர் துணைகாணேன் தானத் தறுகண் மலைஉரியின் சட்டை புனைந்தோன் தரும்பேறே மோனத் தவர்த்ம் அகவிளக்கே முறையோ முறையோ முறையேயோ