ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும் என்னுயிர்க் கின்பமும் பொதுவில் ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன் அன்றிவே றெண்ணிய துண்டோ ஊன்றிய பாதம் அறியநான் அறியேன் உறுகணிங் காற்றலேன் சிறிதும் தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத் துலக்குதல் நின்கடன் துணையே