ஈன்றவ னேஅன்பர் இன்னுயிர்க் கின்புறும் இன்னமுதம் போன்றவ னேசிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே ஆன்றவ னேஎம துள்ளும் புறம்பும் அறிந்துநின்ற சான்றவ னேசிவ னேஒற்றி மேவிய சங்கரனே