ஈன்று கொண்டஎன் தந்தையும் தாயும் யாவும் நீஎன எண்ணிய நாயேன் மான்று கொண்டஇவ் வஞ்சக வாழ்வின் மயக்கி னால்மிக வன்மைகள் செய்தேன் சான்று கொண்டது கண்டனை யேனும் தமிய னேன்மிசைத் தயவுகொண் டென்னை ஏன்று கொண்டரு ளாய்எனில் அந்தோ என்செய் கேன்நர கிடைஇடும் போதே